தரவுகளை கையாளுதல் 

 தரவுகளை கையாளுதல் எனபடுவது தரவானது முறையாக களஞ்சியப் படுத்தபட்டுள்ளதா ?,உரிய இடத்திற்கு சென்றடைந்துள்ளதா ?,பாதுகாப்பாக உள்ளதா ? அல்லது முறையாக அளிக்கப்பட்டுவிட்டதா? என ஆராயும் நடைமுறையாகும். 

 தரவுகளை  கையாளும்  முறைகளானது  தரவின்  பாதுகாப்பிற்கும்  அதன் நம்பகத்தன்மைக்கும் மிக முக்கியமானதாகும். தரவுகளை முறையாக கையாள்வதற்கு ஒழுங்கான திட்டமிடல் அவசியமாகும். இச்செயற்பாட்டினை இரு முறைகளின் மேற்கொள்ள முடியும். அவையாவன  கையால் கையாளும் முறை மற்றும் இலத்திரனியல் முறை என்பனவாகும்.

கையால் தரவுகளை கையாளும் போது காகிதங்கள் , பென்சில் , பேனா போன்ற காகிதாதிகள்  பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் பெரும்பாலும் அட்டவணைகள்  அமைத்து தரவுகள் களஞ்சியப்படுத்தப்படுகிறது. 

உதாரணம் : 
  • பாடசாலை தினசரி வரவுபதிவு புத்தகம் (Register)
  • பாடசாலை பாடப்பதிவு புத்தகம் (Record Book)

       இலத்திரனியல் முறையில் தரவுகளை கையாள்வதற்கு  கணினிகள்   பயன்படுத்தபடுகின்றது. இதற்காக  உருவாக்கப்பட்டுள்ள MS-ACCESS,MY SQL FOX-PRO,ORACLE போன்ற மென்பொருட்கள் இச்செயட்பாட்டினை இலகுவாக மேற்கொள்வதற்கு  உதவுகின்றது.  

  



No comments:

Post a Comment

Video